சென்னையில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து.!

0 2361

சென்னை அடையாறில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தில் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிவேகமான பைக் ரேசில் சென்று, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றோரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், மணிப்பூரைச் சேர்ந்த கரீனா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த சிலர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments