கனடாவில் டிராக்டர் டிரைலர் மீது வேன் மோதி விபத்து... 5 இந்திய மாணவர்கள் பலி

0 1700

கனடா ஆண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக கனடாவுக்கான
இந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய மாணவர்கள் சென்ற வேன், முன்னால் சென்ற டிராக்டரின் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மொகித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments