உக்ரைனில் மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு கண்டனம்.!
உக்ரைனில் மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. குழந்தைகள் நிதியம் மற்றும் ஐ.நா. பொதுமக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உக்ரைனில் இதுவரை 31 மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், 12 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதோனம் தெரிவித்தார்.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
Comments