மதுக்கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய முன்னாள் முதலமைச்சர்.!

0 2000

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான பாஜக வின் மூத்த தலைவர் உமா பாரதி மதுக்கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

போபாலில் ஏழைகள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படுவதாக உமா பாரதி வீடியோக்களை தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து நேரடியாக களமிறங்கிய அவர், மதுக்கடையில் புகுந்து கல்வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஒருவாரத்திற்குள் இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதிகாரிகளிடம் உமா பாரதி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments