சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்டில் 2 மணி நேரமாக சிக்கித் தவித்த குழந்தை உள்பட 13 பேர் மீட்பு

0 1603

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்டில் 2 மணி நேரமாக சிக்கிக் தவித்த குழந்தை உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ரயில் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து குழந்தை, 5 பெண்கள் உள்பட 13 பேருடன் கீழ் நோக்கி இறங்கிய லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரு தளங்களுக்கு இடையில் திடீரென சிக்கிக் கொண்டது. லிப்டில் சிக்கியவர்கள் அதில் ஒட்டப்பட்டிருந்த அவசர எண்ணைத் தொடர்புக் கொண்டு ரயில்வே காவலர்களுக்கு தகவலளித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொறியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் லிப்டினுள் இருந்தவர்களின் உதவியுடன் மேல் பகுதியில் உள்ள மின் விசிறியை அகற்றி, அதன் மூலம் சிக்கி இருந்த 13 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments