காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் - செயற்குழு கூட்டத்தில் முடிவு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாகவும், வரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கு தயாராவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா காந்தியின் தலைமை மீது செயற்குழு முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர் முன் நின்று கட்சியை வழிநடத்துவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Comments