போரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ எண்ணிய உக்ரைன் பெண் மருத்துவர் கொல்லப்பட்டார்
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உக்ரைனிலேயே தங்கிய பெண் மருத்துவப் பணியாளர் ஒருவர், தாயாருக்கு மருந்து தேடி அலைந்த போது ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
31 வயதாகும் வலேரியா-விற்கு (Valeriia) உக்ரைனை விட்டு வெளியேற வாய்ப்பிருந்தும், அவ்வாறு செய்யாமல் அங்கேயே தங்கி, மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்தார். நோய்வாய்பட்ட அவரது தாயாருக்குத் தேவைப்படும் மருந்து தீர்ந்ததால், தாயாருடன் உக்ரைனை விட்டு வெளியேற முடிவெடுத்தார்.
தாயாருடன் காரில் சென்ற போது, எதிரே வந்த ரஷ்ய துருப்புகளுக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் காரை ஓரங்கட்டியுள்ளார். அப்போது, ரஷ்ய பீரங்கி ஒன்று நடத்திய தாக்குதலில் வலேரியா, அவரது தாயார் மற்றும் ஓட்டுநர் என 3 பேரும் கொல்லப்பட்டனர்.
Comments