சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1.70 கோடி மக்கள் வசிக்கும் ஷென்சென் நகரில் முழு ஊரடங்கு
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கும் ஷென்சென் (Shenzhen) நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரானால் சீனாவில் தினசரி தொற்று பாதிப்பு இருமடங்காக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமையன்று 3 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சாங்சன் நகரைத் தொடர்ந்து ஹூவாய் (Huawei), டென்சென்ட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையங்கள் உள்ள ஷென்சென் நகரத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நகரில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மார்ச் 20ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments