"எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்" - டிரம்ப்

0 1274

ரிபொருள் தேவைக்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை நிரந்தரமாக நிறுத்துவதன் மூலம் உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பை தடுக்க உதவ வேண்டும் என அமெரிக்க அரசை முன்னாள் அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

தெற்கு கரோலினாவில் உள்ள ஃபுளோரன்ஸ் நகரில் டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது, ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் என தான் கருதுவதாக கூறினார்.

புதின் போரை நிறுத்துவார் என கருதிக்கொண்டிருந்தால் அது மேலும் மேலும் மோசமாகிவிடும் என கூறிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது அமெரிக்க அரசாங்கத்திடம் யாரும் இல்லை என கூறினார்.

2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக வழக்கம்போல கூறிய டிரம்ப், 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY