உக்ரைனில் போலி குடியரசை உருவாக்க ரஷ்யா முயற்சி - ஜெலன்ஸ்கி
உக்ரைனில் போலியான குடியரசை உருவாக்கவும், நாட்டை பிரிக்கவும் ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா உள்ளூர் தலைவர்களை மிரட்டியும், அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் கொடுத்தும் போலி குடியரசை உருவாக்க முயல்வதாக தெரிவித்தார்.
ரஷ்ய வீரர்களிடம் வலிமையும், உக்ரைனை வெற்றி கொள்வதற்கான உத்வேகமும் இல்லை என கூறிய ஜெலன்ஸ்கி, அவர்கள் பயங்கரவாதத்தையும், ஆயுதங்களை மட்டுமே கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் மட்டுமின்றி ஐரோப்பாவின் நலனிற்காகவும் நட்பு நாடுகள் தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments