மது அருந்திவிட்டு டாடா ஏஸ் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

0 2207
மது அருந்திவிட்டு டாடா ஏஸ் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

சேலத்தில் மது குடித்துவிட்டு டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நபருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நிலையில், ஆத்திரத்தில் அந்த நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நேற்றிரவு டீசல் நிரப்புவதற்காக தனது டாடா ஏஸ் வாகனத்தை பெட்ரோல் பங்க்குக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ரவுண்டானா அருகே நின்றிருந்த போக்குவரத்து போலீசார், வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது சந்தோஷ்குமார் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவர்களிடம் சந்தோஷ்குமார் வாக்குவாதம் செய்த நிலையில், நீதிமன்றம் சென்று அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை மீட்டுக் கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிச் சென்று, போலீசார் கண் முன்பே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். 92 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments