கொடைக்கானல் கொழுமம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

0 1418

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோகைவரை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், நேற்றிரவு முதல் புதிதாக கொழுமம் வனப்பகுதியிலும் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

நூற்றுக்கணக்காணக்கான ஏக்கர் பரப்பளவில் கட்டுக்கடங்காமல் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், வனப்பகுதி செங்குத்தாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழல் நிலவுகிறது. காட்டு தீயால் கொழுமம் வனப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனிடையே அட்டுவம்பட்டி, கோம்பை உள்ளிட்ட தனியார் தோட்டப்பகுதிகளிலும் காட்டு தீ பரவியுள்ள நிலையில், தோட்ட பராமரிப்பாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments