நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் உள்ள தங்கள் தூதரகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு.!
நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் உள்ள தங்கள் தூதரகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆதரவு படை வசம் இருந்த ஆப்கான், தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் பல்வேறு நிதி பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அரசுத் துறை அதிகாரிகளுக்கு சம்பள பாக்கி, உள்ளிட்ட பல்வேறு நிதிப் பிரச்சினைகள் ஆப்கானில் நிலவுகின்றன.
இந்நிலையில் வாஷிங்டனில் 100 ஆப்கான் அதிகாரிகளுடன் இயங்கி வந்த தூதரகத்தை வரும் வாரத்தில் மூடுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சம்பள பிரச்சினை காரணமாக சீனாவிற்கான ஆப்கான் தூதரக அதிகாரி ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments