உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க கூடுதலாக 200 மில்லியன் டாலரை ஒதுக்கி அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவு.!

0 2214

உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க கூடுதலாக 200 மில்லியன் டாலரை ஒதுக்கி அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 18-வது நாளை எட்டிய நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் பைடனிடம் அதிபர் ஜெலன்ஸ்கி கோரியிருந்தார்.

இதையடுத்து கூடுதலாக 200 மில்லியன் டாலரை வழங்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் உக்ரைனுக்கு 120 கோடி டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments