ரஷ்ய ராணுவம் பெருத்த சேதத்தை கண்ட பின் அதிபர் புதின் புதிய படைகளை களமிறக்கி உள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல்.!

0 1562

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பெருத்த சேதத்தை கண்ட பின் அதிபர் புதின் புதிய படைகளை களமிறக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய இளைஞர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், அதை ரஷ்ய தாய்மார்கள் தடுத்து தங்கள் மகன்களை காக்க வேண்டுமென ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

மெலிடோபோல் நகர மேயரை விடுவிக்கக் கோரி ரஷ்யாவை வலியுறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ்சிடம் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

ரஷ்யாவை எதிர்த்து சண்டையிடாமல் ஒருநாளும் இருக்கப் போவதில்லை என்றும் அதேநேரம் மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்தத்தை ரஷ்யா மேற்கொண்டு மக்கள் வெளியேற உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதிபர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ சாலைகளில் ஒளிபரப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு முழக்கமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY