தாய் இறந்தது தெரியாமல் அவரது உடலுடன் 4 நாட்களாகத் தங்கியிருந்த சிறுவன் மீட்பு

0 5387
தாய் இறந்தது தெரியாமல் அவரது உடலுடன் 4 நாட்களாகத் தங்கியிருந்த சிறுவன் மீட்பு

திருப்பதியில் தாய் இறந்தது தெரியாமல், அவரது உடலுடன் 4 நாட்களாகத் தங்கியிருந்த 10 வயது சிறுவன் மீட்கப்பட்டான். தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ராஜலட்சுமி என்பவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய பத்து வயது மகன் சியாம் கிஷோருடன் திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. தகவலறிந்து போலீசார் வந்து பார்த்தபோது, தலையில் காயத்துடன் ராஜலட்சுமியின் அழுகிய சடலம் வீட்டுக்குள் கிடந்துள்ளது.

4 நாட்களுக்கு முன் அவர் கீழே விழுந்து இறந்திருப்பதும் தாய் இறந்தது தெரியாமல் அவர் உறங்குவதாக எண்ணி இருந்துள்ளான் சிறுவன். தாய் சடலம் அருகிலேயே படுத்து உறங்கி, வீட்டில் இருந்தவற்றை சாப்பிட்டுவிட்டு, அருகிலுள்ள பள்ளிக்குச் செல்வதும் வருவதுமாக இருந்ததும் தெரியவந்தது.

ராஜலட்சுமி அக்கம்பக்கத்தினரிடம் சரியாகப் பேசுவது கிடையாது என்று கூறப்படும் நிலையில், சிறுவனும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments