உக்ரைன் முழுவதும் பெரும்பலான நகரங்களில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கான சைரன் ஒலிக்கவிடப்பட்டுள்ளதால் பதற்றம்
உக்ரைன் முழுவதும் பெரும்பலான நகரங்களில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதை எச்சரிக்கும் வகையில் சைரன் ஒலிக்கவிடப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கீவ் மட்டுமல்லாமல் கார்கிவ், லிவிவ், செர்கசி உள்ளிட்ட நகரங்களிலும், சுமி பகுதியிலும் சைரன் எச்சரிக்கை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தும் வகையில் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் கீவ்விற்கு வெளியே வடகிழக்கில் 64 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்திருந்த ரஷ்ய ராணுவ பீரங்கிகள் அங்கிருந்து பிரிந்து, வடக்கு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருப்பதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் நேற்று வெளியாகி இருந்தன.
இந்த சூழலில் தலைநகர் கீவ்வில், ரஷ்ய தாக்குதலுக்கான சைரன் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
Comments