ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மனிதநேயத்துடன் செயல்பட்டனர் ; பிரதமர் மோடி
கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மனிதநேயத்துடன் மக்களுக்கு உணவு, மருந்துகள் வழங்கியதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காவல்துறையிலும், ராணுவத்திலும் ஆள்தேர்வில் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
மக்களுடன் இணக்கமாகச் செயல்படுவது குறித்துக் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாதுகாப்புக்கான ஓர் ஆயுதமாகத் தொழில்நுட்பம் மாறியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகளில் இருப்பதற்கு வெறும் உடல் பயிற்சி மட்டும் போதாது என்றும், இப்போது உடல் தகுதி இல்லாவிட்டாலும் சிறப்புத் திறன் கொண்டவர்களும் பாதுகாப்புத் துறையில் பங்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Comments