ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கீழ் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், கடந்த 20 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
முதல் இரண்டு வழக்குகளில் ஏற்கனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், நேற்றே சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு மேல் ஆனதால் சிறைத்துறை விதிகளின் படி பிணையில் விடுவிக்க இயலாது நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments