உக்ரைனுக்கு 300 மில்லியன் யுரோ மனிதாபிமான நிதி விடுவிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைனுக்கு அறிவித்த 1.2 பில்லியன் யூரோ மனிதாபிமான நிதியுதவியில் முதற்கட்டமாக 300 மில்லியன் யுரோ பணத்தை விடுவித்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் சரிந்த உக்ரைனின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்த 120 கோடி யூரோ பணம் நிதி உதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
அதில் முதற்கட்டமாக 600 மில்லியன் யுரோவை விடுவிப்பதாக தெரிவித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 300 மில்லியன் யுரோவை விடுவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள 300 மில்லியன் யுரோ வரும் வாரத்தில் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Comments