உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் - அமெரிக்க அதிபர்
உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ரஷ்யாவின் வழக்கமான வர்த்தக உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு விருப்பமான நாடுகளின் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளத்தை அச்சுறுத்தும் போரை புதினால் தொடர முடியாது என ஜோ பைடன் கூறினார். உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேசியதாக் கூறிய பைடன், தங்கள் நாட்டைப் பாதுகாக்க உக்ரைனியர்கள் துணிச்சலாகப் போராடும்போது, அமெரிக்கா உக்ரைனுடன் நிற்கிறது என்றும் குறிப்பிட்டார்.
Comments