தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

0 2465

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நாளையும், நாளை மறுநாளும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments