ஆய்வகங்களில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும் - உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

0 3046

ஆய்வகங்களில் உள்ள நோய்க்கிருமிகளை உடனடியாக அழிக்கும் படி உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 16ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

பல நாடுகள் போல், உக்ரைனிலும் கொரோனா போன்ற மனிதர்கள், விலங்குகளுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக, ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, ஆய்வகங்களில் இருந்து நோயை உண்டாக்கும் கிருமிகள் வெளியேறும் அபாயம் அதிகரித்துள்ளதாக உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஆய்வகங்களில் இருந்து நோய்க்கிருமிகள் பரவுவதை தடுக்கும் விதமாக, அதனை உடனடியாக அழிக்க உக்ரைனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments