பேடிஎம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை
பேடிஎம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் கண்காணிப்பு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி முறையாக பின்பற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தணிக்கையாளர்களை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட ஆர்பிஐ, அவர்கள் அளிக்கும் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்களை சேர்க்க அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Comments