முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தை பைனாகுலர் மூலம் கண்காணித்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தோல்வி
உத்தரபிரதேசத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கை மையத்தை பைனாகுலர் மூலம் கண்காணித்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
வாக்குப்பதிவு மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்திருந்தது. இந்த நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தின் ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட யோகேஷ் வர்மா, திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்து, பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் ஹட்டிக், 7ஆயிரத்து312 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஷ் வர்மா தோல்வியை தழுவினார்.
Comments