வலிமை திரைப்பட கதை தொடர்பான வழக்கில், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்

0 5696

வலிமை திரைப்பட கதை தொடர்பான வழக்கில், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் 'மெட்ரோ' படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.

காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, போனிகபூர், வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments