காங். விரும்பினால் 2024 பொதுத் தேர்தலின் போது இணைந்து போட்டியிடத் தயார் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இணைந்து போட்டியிடத் தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மம்தா, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதற்கு சாத்தியமில்லை என குறிப்பிட்டார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் முடிவுகளைக் கண்டு ஆக்ரோஷமடைய வேண்டாம் என்றும் நேர்மறையாக சிந்தியுங்கள் என்றும் மம்தா பானர்ஜி கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.
Comments