ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் மூலம் தாக்குதல்

0 1634
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை மட்டுமின்றி, உலக நாடுகளுக்கான ஆற்றல் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையையும் குறிவைத்து இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஏமனில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போரில், ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் சவுதியில் உள்ள எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments