நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு, திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது என மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார், ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
Comments