உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 242 பேருடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்

0 2120

உக்ரைனின் சுமி நகரில் இருந்து ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 242 இந்தியர்களுடன் போலந்து நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம், டெல்லி வந்தடைந்தது.

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுமி நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து இரண்டு வாரங்களாக பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த சுமார் 600 இந்தியர்கள் கடந்த புதன்கிழமை, ரயில் மூலம் போலந்து நாட்டின் போல்டோவா நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்களில் 242 பேரை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு போலந்தின் Rzeszow நகரில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. போலந்து நாட்டில் இருக்கும் எஞ்சியவர்களையும் அழைத்துக் கொண்டு மேலும் 2 சிறப்பு விமானங்கள் இன்று டெல்லி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments