ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு
ரஷ்யாவில் தங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகவும், தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்கி ஆதரவைத் தொடருவோம் என்று தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Comments