சரக்கு வண்டிகளில் செல்லும் மலைவாழ் மக்களிடம் எஸ்.ஐ ஒருவர் பணம் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்

0 2206

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை அடிவாரத்தில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மினி சரக்கு வண்டிகளில் பயணம் செய்த மலைவாழ் மக்களிடம் வண்டிக்கு 100 ரூபாய் தரும்படி கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது.

கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனிசாமி மீது, ஏற்கனவே மலைவாழ் மக்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போதிய பேருந்து வசதி இல்லாததால் மினி சரக்கு வண்டிகளில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் பயணம் செய்வது வழக்கம் என்ற நிலையில், அந்த வாகனங்களை நிறுத்தி பழனிசாமி பணம் கேட்பதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments