ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்.. கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரிக்கை

0 1896

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் தனியார் பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கியபடியும் மேற்கூரையில் அமர்ந்தும் பயணித்து வருகின்றனர்.

மாங்கோட்டை-கறம்பக்குடி செல்லும் தனியார் பேருந்துகளில் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

விபத்துகள் ஏதும் நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments