மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதல் இனப்படுகொலை - உக்ரைன் அதிபர்
மகப்பேறு மருத்துவமனை தாக்கப்பட்டது இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி டெலகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனைகளும், பள்ளிகளும் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியர்களின் இனப்படுகொலை நடக்கிறது என்பதற்கான இறுதி ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையின் மீது வான்வழி தாக்குதல் என்றும் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்நிலையில் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் 40 ஆயிரம் பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments