திருமணமான 4நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 3006

சென்னை கொரட்டூரில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த  4 நாட்கள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திருமணத்தில் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சந்தியா கடந்த 7ந்தேதி அன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்டிஒ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments