தொடக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
உதவி ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆதி முத்தமிழ்ச் செல்வன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
Comments