விழுப்புரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இளைஞர் பலி.!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் ஜெகநாதன் ஆகிய இளைஞர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஒதியத்தூரில் இளைஞர்கள் சென்ற பைக்கும் திருக்கோவிலூரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இளைஞர்கள் முன்னே சென்ற டூரிஸ்ட் வேனை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்திசையில் ஆம்புலன்ஸ் வந்ததால் இந்த விபத்து நேரிட்ட நிலையில், பைக்கை ஓட்டிச் சென்ற ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஹரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments