உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் அமோக வெற்றி.!

0 3172

உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனுமான பங்கஜ் சிங், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

அம்மாநிலத்தின் நொய்டா தொகுதியில் போட்டியிட்ட பங்கஜ் சிங், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளை பெற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

சுமார் 70 சதவீத வாக்குகளை பெற்ற அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சுனில் சவுத்ரி 62 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments