உக்ரைன் மீது போர்.. வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்.. ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வேலை இழக்கும் அபாயம்
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்ய தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியதால் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கேம் பிரியர்களால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் - 5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்போவதில்லை என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் (Heineken) ரஷ்யாவில் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. அதே சமயம், கார்ல்ஸ்பெர்க் நிறுவனம், தனக்கு சொந்தமான ரஷ்ய பீர் நிறுவனத்தில் பணியாற்றும் 8,400 ஊழியர்களின் நிலை கருதி உற்பத்தியை தொடர்வதாகவும், ஆனால் லாபத்தை உக்ரைனுக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
Comments