ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயார் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரைதான் ஆனால், இது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற 3 நாடாளுமன்ற தேர்தல்கள் அந்த முறையிலேயே நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் சட்டமன்றமும் சில சமயங்களில் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டதால் அதன் கால அட்டவணை சீர்குலைந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், 5 ஆண்டு கால ஆயுளை நிறைவு செய்யாத சட்டப்பேரவையை, அரசியலமைப்பின் கீழ் கலைக்க முடியுமா அல்லது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments