ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்.!
ராமேஸ்வரத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுர மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையிலான அதிகாரிகள், ராமேஸ்வரம் நகரில் உள்ள கடைகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 20க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 135 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத மிக்சர், ஸ்வீட் பாக்கெட்டுகளையும், காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்த கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பிளாஸ்டிக் விற்பனை செய்த கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Comments