உ.பி.யில் கடந்த தேர்தலை விட தற்போது 50 இடங்களுக்கு மேல் குறைவாக பெற்ற பாஜக
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தபோதும் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் தற்போது 50 இடங்களுக்கு மேல் குறைவாக பெற்றுள்ளது.
அம்மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்துள்ள சமாஜ்வாதி கடந்த முறையை விட 75 இடங்களுக்கு மேல் அதிகம் பெற்றுள்ளது.
பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி கடந்த தேர்தலை விட 70 இடங்களுக்கு மேல் அதிகம் பெற்று மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 90 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.
அங்கு ஆட்சியை இழந்த காங்கிரஸ் கடந்த முறையைவிட இம்முறை சுமார் 60 இடங்களை இழந்துள்ளது. அதேபோல், உத்தரகாண்டில் ஆட்சியை தக்கவைத்துள்ள பாஜக கடந்த தேர்தலை விட 9 இடங்களை குறைவாக பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 7 இடங்கள் அதிகம் கைப்பற்றியுள்ளது.
கோவாவில் ஆட்சியமைக்க உள்ள பாஜக கடந்த தேர்தலைவிட 6 தொகுதிகளுக்கு மேல் கூடுதலாக பிடித்துள்ள நிலையில், 2ஆம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை இழந்துள்ளது.
Comments