ஈரோடு கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மாடுகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மாடுகள் விற்பனையாகின.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு வாரந்தோறும் வியாழக்கிழமையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறும்.
இதன் படி இன்று சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை மற்றும் கன்று குட்டிகள் என 600 க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.
நாட்டு மாடு 50 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஜெர்சி மாடு 22 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய் வரையிலும் சிந்து மற்றும் கலப்பின வகை மாடுகள் ரூபாய் 20 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை போனது.
Comments