ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

0 5971
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880  ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 910 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியும் கிலோவுக்கு 2,600 ரூபாய் விலை குறைந்து 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாங்க ரீதியிலான தீர்வைக்காண உக்ரைன் அரசு தயாராக இருப்பதன் எதிரொலியாக இரு நாடுகள் இடையிலான போர்ப்பதற்றம் சற்று தணிந்திருப்பதால் தங்கத்தின் விலை குறைந்திருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments