உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொருளாதாரம், மக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியங்களிலும் உக்ரைன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
உக்ரைனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள் நிதியுதவி உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.
உக்ரைனுக்கு அவசரகால நிதியுதவி அளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது. கூட்டத்தில் உக்ரைனுக்கு 140 கோடி டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி அனுமதி அளித்து இருந்தது.
Comments