உக்ரைன் மருத்துவமனைகள் மீது 18 முறை ரஷ்யப் படைகள் தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு… தொற்று நோய் பரவல் வேகமெடுக்கும் அபாயம்
உக்ரைனில் 18 மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் அதோனம், ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றார். போர் நிறுத்தத்தை ரஷ்யா கைவிடக் கோரி உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருதாக கூறினார்.
15-வது நாளை போர் எட்டிய நிலையில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலை அவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உக்ரைனில் அதிகம் காணப்படுவதாக தெரிவித்தார்.
Comments