ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

0 1725
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யா, அதற்கு உதவியதாக பெலாரஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 862 பேர் மீது பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளன.

பணப் பரிமாற்றத்திற்கான தொலைத் தொடர்பு அமைப்பான SWIFT-ல் இருந்து 3 பெலாரஸ் வங்கிகளை வெளியேற்ற ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரஷ்ய கடல் சார் பாதுகாப்பு பொருட்கள், கப்பல் கட்டுமானம் மற்றும் ரேடியோ தொலைத் தொடர்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments