உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
அதேபோல் 60 எம்.எல்.ஏ. க்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவை தேர்தல் இரு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள், வாக்குப் பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு மூடி சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்து எட்டு முப்பது மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
Comments