இந்தியர்களை மீட்கும் ஆபரேசன் கங்கா நாளையுடன் நிறைவடைகிறது என தகவல்

0 1820

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேசன் கங்கா மீட்பு பணி நாளையுடன் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மீட்பு பணிக்காக சென்ற அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு நாளை மாலை இறுதி விமானம் புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதுவரை 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். 

உக்ரைனில் சுமி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் தங்கி இருந்த இந்திய மாணவர்கள் 700 பேர் சிக்கியிருந்த நிலையில், அவர்களும் சிறப்பு ரெயிலில் எல்லைக்கு வந்த வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

இவர்களில் 57 பேர் தமிழக மாணவர்கள் ஆவார்கள். உக்ரைனில் தொழில் நிமித்தமாக இன்னும் சிலர் அங்கேயே இருப்பதாக தெரிவித்து விட்டனர். அதில் 34 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments