சீர்த்திருத்த திருமணம் இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் - முதலமைச்சர்

0 2574

தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி மகேந்திரன் மகனுக்கும் திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேசிய முதலமைச்சர், சீர்த்திருத்த திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் எனவும், அதற்கு தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments